ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 73-வது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதேபோன்று சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜனவரி 23ஆம் தேதியே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் டெல்லியில் தொடங்கியது. இந்த நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!