முறையான விதிமுறைகளை ஏற்படுத்தும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதாகவும், இந்தப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.