2021ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, நீதிபதிகள் வெறும் 5 எஃப்.ஐ.ஆர். பதிவை மட்டும் வைத்து 7.5 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்தனர்.மேலும் மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மனுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என எழுந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அபராதத்தை ரத்து செய்தனர்.