சென்னையில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை எட்டி வந்தன.

இந்நிலையில், சென்னையில் கடந்த 36 நாட்களாக எந்த மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!