வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவில் மாற்றம் இல்லை என்றும், வழக்கமான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விசேஷ நாட்களில் மட்டும் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கம் சிஎஸ்ஐ எவர்ட் பள்ளியில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
குறிப்பிட்ட நாட்களில் கோவில்களில் பக்தர்கள் மட்டுமே அனுமதியில்லை என்றும், தினசரி பூஜைகள் வழக்கம் போன்று நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.