கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் இதற்கு முன் “ஜேம்ஸ்” என்ற கன்னட படத்தில் நடித்து வந்த நிலையில் தான் உயிரிழந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த “ஜேம்ஸ்” படத்தின் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. அதில் புனித் ராஜ்குமார் ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் படம் உள்ளது. இதையொட்டி பெங்களூருவில் புனித் ராஜ்குமாரின் பேனர்களுக்கு பிரமாண்டமான மாலைகள் அணிவித்தும், பால் ஊற்றியும், பட்டாசுகள் வெடித்தும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி நேற்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.