நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடந்து வருகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு தளமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சேவை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவுகூருகிறோம். அனைவரும் நலமாகவும் வளமாகவும் இருக்கட்டும். சுற்றிலும் நல்லிணக்கம் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியில்,

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சக குடிமக்களுக்கு, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நீதி மற்றும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் பின்பற்றவும் தீர்மானிப்போம் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!