குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் இரண்டு நாட்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று பஞ்சாப் மாநிலம் சண்காரில் அமைந்துள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இதையடுத்து ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.