அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 3 நாள் பயணமாக, நேபாள பிரதமர் தியூபா மனைவியுடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான ரயில் தொடர்பு, மின்பரிமாற்ற அமைப்பு மற்றும் ரூபே அட்டை பயன்பாடு ஆகியவற்றை மோடியுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் வாரணாசி சென்ற தியூபா, மனைவியுடன் காசி விஷ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.