தமிழக அரசை கண்டித்து வரும் 23- ம் தேதி ஆர்ப்பாட்டம்

 

தமிழக அரசை கண்டித்து வரும் 23- ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய மாநில மற்றும் பொது துறை சார்ந்த ஓய்வூதியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் என அரசு அளித்த வாக்குறுதியை இன்றைக்கு அவர்களே மீற முயல்வதாக குற்றம் சாட்டி அவர்கள்,  அரசின் இந்த அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாகவும், பல நீதிமன்ற வழக்குகளின் போது அரசு போக்குவரத்து துறை செயலாளர் நேரடியாக ஆஜராகி இந்த உறுதிமொழியை கூற வேண்டிய அவசியம் என்ன என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவது போல தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளது என்றும், 77 மாதங்களாக அகவிலைப்படி கொடுக்கவில்லை என்றால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உடைய குடும்பங்கள் எப்படி வாழ முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தை தமிழக அரசு மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும் 23ஆம் தேதி போராட்டத்திற்கு பிறகும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து துறை ஓய்வூதியர்களை  ஒன்றுதிரட்டி சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!