புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 1 நபர்க்கும், ஏனாமில் 3 நபர்களுக்கும், என மொத்தம் 34 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 150 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,63,995 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,107 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.