புதுக்கோட்டையில் தந்தை இறந்த செய்தி கேட்டு மனமுடைந்த மகன் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்தார்.
தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கே.ஆர்.சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார். திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வரும் இவரது மகன் சசிகுமார், வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார்.
தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் வெளிநாட்டில் இருந்து பெங்களூரு சென்ற சசிகுமார், தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் 45 நிமிடத்தில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து காரில் தென்னங்குடிக்கு புறப்பட்டார்.