லகிம்பூருக்கு செல்ல ராகுல், பிரியங்காவிற்கு அனுமதி

உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு செல்ல இருப்பதாகவும், விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது எனவும் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இதைத்தொடர்ந்து லகிம்பூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேருக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!