பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் ஆயுத பூஜையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் தனது மகள், மருமகன் மற்றும் பேரனுடன் அண்ணாத்த படத்தை பார்த்ததை பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்த்த தனது பேரன் தன்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!