தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கமாக முதல்வரின் பாதுப்புக்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அது தற்போது ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்து முதல்வரும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.