“ஜெய் பீம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 39 வது படம் “ஜெய் பீம்”. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும்.

இந்நிலையில், “ஜெய் பீம்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் நேரடியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!