‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித்தின் அடுத்த படம் வலிமை. மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகார பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ட்விட்டரில் ” வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அவர் பதிவிட்டுளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!