இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மேலும் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, 50% மாணவர்களுடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்தது. மேலும் மாணவர்கள் முக கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.