இந்தியா வருகை தரும் ரஷ்ய அதிபர் .. 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என தகவல்

21வது ஆண்டு இந்தியா – ரஷ்யா உச்சி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6ம் தேதி டெல்லி வருகிறார். இந்தியா – ரஷ்யா இடையே 10 முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. அதன்படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர்.

Translate »
error: Content is protected !!