ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக செல்வகணபதி பதவி வகித்து வருகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான செல்வகணபதி பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதற்கிடையே, பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் நாளை வேட்புமனுவை தாக்கலை செல்வகணபதில் செய்யவுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!