தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். அவர் தனது நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகா ரவியை கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்துகொண்டார். சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
சினேகன் – கன்னிகாவின் திருமணத்திற்கு திரையுலகினர் பலர் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா சினேகா மற்றும் அவரது மனைவி கன்னிகாவை தனது ஸ்டுடியோவுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சினேகனுக்கு மோதிரத்தை சிறப்பி பரிசாக அளித்துள்ளார்.