பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

 

ராம நவமியை முன்னிட்டு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை 2500 லிட்டர் பால் உள்ளிட்ட திவ்ய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் இன்று ரா ராமநவமி விழாவை முன்னிட்டுபல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது 36 அடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இங்கு ராம நவமியை முன்னிட்டு 36 அடி விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2,500 லிட்டர் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து 106 திவ்ய தரிசு நிலங்களுக்கு யாத்திரையாக சென்று ராமர் பாதத்திற்கு பூஜை செய்யப்பட்ட ராமர் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இன்று மாலை ராமர் சீதைக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!