அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,…
Tag: இந்தியா
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…
டெல்லி: தொழிற்சாலையில் தீ விபத்து.. 17 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன
டெல்லி, மாயாபுரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் அந்த புகைமண்டலம் போல் காட்சி அளித்தது. மேலும் தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
மியான்மரில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
சீனாவில் கடும் நிலநடுக்கம்.. 2 பேர் பலி
சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக உயர்வு
சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.39 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30, 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 47 ஆயிரம் 325 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…