புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராகப் எம்.எல்.ஏ ராஜவேலு பொறுப்பேற்பு

புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றித் துணை சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில், புதுச்சேரியில் 15 வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை சபாநாயகராக என்.ஆர்.…

கொடைக்கானல் நகர் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு ப‌குதியில் புகுந்து அட்ட‌காச‌ம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் நகர் பகுதிக்குள்  வன விலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டெருமை , பன்றி , மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனை தொடர்ந்து தற்போது குரங்குகள்…

ஐஸ்லாந்து நாட்டில் இருந்து மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு

ஐஸ்லாந்து நாட்டில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியில் கொரோனா வைரஸ்சின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நோய்யாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துவருகிறது. இதனால்…

இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் அறிவிப்பு..!

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம். மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க…

நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணியவில்லை – மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,37,03,665…

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..!

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.…

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவிப்பு

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்கள் வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு உதவ தயார் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு எப்படி உதவலாம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை… ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள்…

Translate »
error: Content is protected !!