கொடைக்கானலில் கடந்த ஆண்டை போல நகராட்சி சார்பாக குறைந்த விலையில் நடமாடும் காய்கறி வாகன மூலம் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கபட்டது போல் தற்பொழுதும் நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காய் கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி.. தமிழக அரசு உத்திரவு படி காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி கடைகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் கொடைக்கானலில் நிலவும் மழை காரணமாக கடைகள் 9 மணிக்கு திறக்கபடுகிறது. 10மணிக்குள் காய்கறி வாங்க கூட்டம் அலை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்துள்ளதால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர் .மேலும் காய்கறிகடைகளில் கூட்டம் அலைமோதுவதால் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது எனகடந்த ஆண்டு கொரோனா காலத்தில் நகராட்சி சார்பாக ஆணையாளர் நாராயணன் நடமாடும் நியாய விலை காய்கறி கடைகளை பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியுடன் விற்பனை செய்யபட்டது அதே போல் தற்பொழுது உள்ள சூழலில் பொதுமக்கள் வெளியே வராமல் அவர்கள் இருக்கும் பகுதிக்கே சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.