கொடைக்கானலில் நேற்று இரவு கனமழை.. இந்திரா நகர் பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து குடியிருப்பு சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும் திடீரென கனமழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே லேசான மழை கொடைக்கானல் நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று…

கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாடுகளை பிடித்து விற்பனை செய்யும் கும்பல் – தேனி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கதவே கோவில்…

தொழிற்சங்கங்கள் இணைந்து திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டம்

சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம், தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி…

கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு

கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு கேரட் , பீன்ஸ் , அவரை , உருளைக்கிழங்கு,…

கொடைக்கானலில் வாசனைத் திரவியம் மற்றும் தைலம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறை – ஏராளமானோர் பங்கேற்பு

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வாசனைத் திரவியம் மற்றும் தைலம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறை நடைபெற்றது ஏராளமானோர் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சார்பாக வாசனை திரவியங்கள் மற்றும் யூகலிப்டஸ்…

கொடைக்கானலில் பலத்த காற்று.. கீழ்மலை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை போது முழுவதுமாகவே வீசி வந்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.   மேலும் கொடைக்கானல்…

கொடைக்கான‌ல் அருகே பேத்துபாறை குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதும‌க்க‌ள் அச்சம்

கொடைக்கான‌ல் அருகே பேத்துபாறை குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதும‌க்க‌ள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர்  ,அஞ்சிவீடு ,தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது ..இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.…

அரசு நியாயவிலைக் கடையில் அரிசியை கேரளாவுக்கு கடத்தி விற்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடி பெருமாள் கோயில் அருகே இரண்டாம் நம்பர் அரசு நியாய விலைக் கடைகள் அரசு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்காக வழங்கவேண்டிய பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் கடையின் ஊழியர் ரவி என்பவர் மொத்தமாக தனியாருக்கு விலைக்கு விற்று கேரளாவிற்கு…

தேனி வருசநாடு அருகே செந்நாய்கள் கூட்டம் தாக்கி 11 வெள்ளாடுகள் பலி.. 12 ஆடுகள் மாயம் – வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்கு  சொந்தமான தோட்டம் வருசநாடு பஞ்சந்தாங்கி மலை அடிவாரத்தில் உள்ளது – தனது தோட்டத்தில் 23 வெள்ளாடுகளை தொழு வைத்து வளர்த்து வருகிறார். இன்று  வழக்கம் போல…

கொடைக்கான‌லில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி

கொடைக்கான‌லில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது ..இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல்விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொட‌ர்ந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் க‌ட்டுமான‌ பொருட்க‌ளின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை  படிப்படியாக  உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை ரூபாய்105.84  பைசாவுக்கும்  டிச‌ல் விலை ரூபாய்  96.18 பைசாவுக்கு   கொடைக்கானலில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன  ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால்  தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவதுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல்  விலையை  குறைக்க   வேண்டுமென கோரிக்கையும்  எழுந்துள்ளது .

Translate »
error: Content is protected !!