செவ்வாய் வெள்ளி சந்திரன் ஆகிய கோள்கள் ஒரே நேர் கோட்டில் இணையும் நிகழ்ச்சி கொடைக்கானலில் வானில் தெளிவாக தென்பட்டது. செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றே ஒன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு கொடைக்கானலில் நேற்று வானில் தெளிவாக தென்பட்டது. இந்த…
Tag: Kodaikanal
கொடைக்கானலில் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பூங்காக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு கழிக்க நாளை முதல் அனுமதி
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொடைக்கானலில் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , ரோஜா பூங்கா , செட்டியார் பூங்கா உள்ளிட்டவை நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் கண்டு கழிக்க அனுமதிக்கப்படும் என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது ..இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல்விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை ரூபாய்105.84 பைசாவுக்கும் டிசல் விலை ரூபாய் 96.18 பைசாவுக்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவதுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட அதிசய மலர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பூத்து உள்ளது கொரோனா மலர். கொரானா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால்…
கொடைக்கானலில் சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலை பகுதிகளான தாண்டிகுடி , பண்ணைகாடு , பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது . இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.…
பெட்ரோல், டிசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடைக்கானலில் கண்டனஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டிசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடைக்கானலில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வருகிறது ..இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் ஆளும் மோடி அரசு தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கொடைக்கானலில் 100 ரூபாயை கடந்து செல்லும் பெட்ரோல் விலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக தொடர்ந்து இரண்டாம் நாளாக பெட்ரோல் விலை 100.04 ஸ்பீட் பெட்ரோல் 102.83 ஆகவும் டிசல் 93.92 ரூபாய்க்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .. ராஜஸ்தானை தொடர்ந்து கொடைக்கானலில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் . நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ..பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
கொடைக்கானலில் சதமடித்த பெட்ரோல் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி…!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில்…
கொடைக்கானலில் முதன் முறையாக மேல்மலை மன்னவனூர் எழுபள்ளம் ஏரி முழு கொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் எழுபள்ளம் ஏரி எழில் கொஞ்சும் புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி,தடுப்பணையின் மட்டத்தை உயர்த்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 90 லட்சம் ரூபாயில் திட்டம் வகுக்கப்ப்ட்டது. அத்திட்டத்தை முந்தைய அரசு முறையாக செயல்படுத்தாமல் முறைகேடுகள் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்ததன் அடிப்படையில்,நீதி மன்றத்தின் மூல அத்திட்டத்திற்கு உள்ளூர் மக்களால் தடை வாங்கப்பட்டது. அதன்பின்னர் ஒரு வருட காலமாக அத்திட்டம்செயல்படுத்தப்படாமல் இன்று வரை கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் இந்தஆண்டில் முதன் முறையாக கடந்த மாதம் மற்றும் தென்மேற்கு பருவமழையால் முழுகொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்துள்ளது. இந்த ஏரியில் நீரை இன்னும் சிலமாதங்களில் பூண்டு வெள்ளாமைக்கு அக்கிராம மக்கள் பயன்படுத்தியதும், ஏரியைதூர் வாரி, மட்டத்தை உயர்த்தி குடிமராமத்து செய்ய, புதிய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.