சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி கைது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காளிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே திருத்தங்கல்லில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் பாலியல்…

வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்

வைகை ஆற்றில் மணல் திருட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடைகிறது. வைகையாற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி,…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கல்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம்…

மீட்கப்பட்ட கோவில் நிலங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியீடு

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பது குறித்து பொதுமக்கள் பார்வையிட இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 100க்கும் அதிகான திருக்கோயில்களுக்கு…

தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்க- தமிழக அரசு பதில் கூற உத்தரவு

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1949ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல்…

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்…

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள…

மாத்தி பேசும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், நகை கடன்  தள்ளுபடி என கூறி விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை  கூறுவது மக்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில்  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை…

கரடியை துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள்

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் தாக்க வந்த கரடியை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். சாமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் கரடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் கரடி கிராமவாசிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.…

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசு, உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு, ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில்,…

இதுவரை 64,299 பேர் வேட்பு மனு தாக்கல்

9  மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 64 ஆயிரத்து 299 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்…

Translate »
error: Content is protected !!