உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக யோகி…

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தமிழக அரசு

கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

அதிமுக திமுக இடையே வாக்குவாதம்-கைகலப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் பொங்கல் பரிசு வழங்க வந்த எம்.எ.ஏ-வை தடுத்து நிறுத்தியதால் அதிமுக திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் தொகுப்பு வழங்கும்…

அரசு கவனமாக உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்களின் கற்றலில் இடைவெளி இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் தொகுப்பு…

அரசியல் காழ்ப்புணர்ச்சி: அம்மா கிளினிக் மூடுவதற்கு கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அம்மா கிளினிக் திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா…

கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 45 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும் மாஹேவில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர் என…

சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் அதனை தற்காலிகமாக தார் வைத்து சரி செய்துள்ளனர்.…

திமுக எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த…

கொரோனா பரவல் அதிகரிப்பு: சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இதில், சென்னையில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!