சந்தையில் புளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்களில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அதிகளவில் உள்ளது.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் புளி வரத்து 30 டன் அளவிற்கு வந்தன. இதனால் புளியின் விலையில் சரிவு ஏற்பட்டு கடந்த வாரம் 1 கிலோ 80 ரூபாய்க்கு விற்ற புளி இந்த வாரம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் புளி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே டீசல் விலை, ஆட்கள் கூலி உயர்வு என்ற நிலையில் , புளி விலை மட்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், மொத்த வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைகின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.