2022 – 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல்

 

தமிழக சட்டசபையில், நேற்று காலை 10 மணிக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன், 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டசபை முடிந்த பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் சபாநாயகர் பேசுகையில், நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுரைறயாகும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 21ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை, பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் என்றும், வரும் 24ம் தேதி நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், வரும் அன்றுடன் சட்ட சபை நிறைவடையும் என்றும் குறிப்பிட்ட சபாநாயகர், பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் மூன்று நாட்களும், கேள்வி நேரம் உண்டு எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!