தமிழகம் வருகிறது மத்திய குழு… ஒமைக்ரான் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மிசோரம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்து வருகிறது. இந்த குழு மாநிலத்தில் ஒமைக்ரான் வகைகளின் தன்மையை ஆய்வு செய்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!