புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!