தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்

மாணவர்கள் தங்களில் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது,

நீட் தேர்வில் விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. மாணவர்கள் தங்கள் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!