முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. மாலை 5 மணிக்கு பிறகு தேர்தலில் ஈடுபடாத நபர்கள் பஞ்சாயத்து பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் மற்றும் 6 ம் தேதி வரை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில் 24,417 இடங்களுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

Translate »
error: Content is protected !!