உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் பலியான விவசாய குடும்பங்களை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி, காவலில் வைக்கப்பட்டவர் எதற்கும் அஞ்சாதவர். ஒரு உண்மையான காங்கிரஸ்காரர், விடமாட்டார்! சத்தியாக்கிரகம் நிற்காது. என்று பதிவிட்டார்.