டிரைவர் தாக்கப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது – மத்திய இணை மந்திரி

உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கடந்த 10-ந் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கி வைப்பதற்காக சென்றார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து வெடித்த வன்முறையில் மொத்தம் 9 பேர் பலியாகினர். 

இதில் விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதிய காரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மீது மோதிய காரில் தனது மகன் பயணம் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.

இது குறித்து அவர் கூறியது, கார் மீதான தாக்குதலில் டிரைவர் பலத்த காயமடைந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. அங்கிருந்தவர்கள் மீது மோதிய காரில் என் மகன் பயணம் செய்யவில்லை. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ‘ என்றார்.

Translate »
error: Content is protected !!