தலைநகர் டெல்லியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே மற்ற மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதால் மாணவர்களால் தங்களது பாடங்களை பயில்வதில் சிரமம் அடைந்து வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அவர் கேட்டுக்கொண்டார்.