மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டியது

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு எட்டு மணியிலிருந்து இன்று காலை 4:30 மணிக்குள்ளாக சுமார் 2 அடி அளவிற்கு உயர்ந்தது, இதன் காரணமாக 100 அடியை 68வது ஆண்டாக எட்டியுள்ளது.

கேரளா கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கர்நாடக அணிகளுக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 8 ஆம் தேதி முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக வினாடிக்கு 4,500 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர் படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரண மாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன் தினம் 3,149 கன அடியாக அதிகரித்தது, இதனைத் தொடர்ந்து நேற்று காலை வினாடிக்கு 8010 கன அடியாக அதிகரித்தது, மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,147 கன அடியாக அதிகரித்துள்ளது. இரவு 8 மணி அளவில் 19,147 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 4:30 மணியளவில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 68வது முறையாக 100 அடியை எட்டியது. இந்த நிலையில் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அணையின் நீர்மட்டம் 42 வது ஆண்டாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது .

Translate »
error: Content is protected !!