குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு

என்.எல்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுடன் 2 ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு என்.எல்.சி., சோலார் எனர்ஜி கார்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆகிய தொழில் நிறுவனங்களுடன் குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி என்.எல்.சி.யிடமிருந்து ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும், சோலார் எனர்ஜி கார்பரேஷனிடம் இருந்து ஆயிரம் மெகாவாட் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெடிலிருந்து 400 மெகா வாட் என மொத்தமாக 2 ஆயிரத்து 900 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!