கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மயிலாடுதுறைக்கு பஸ்சில் வந்து செல்கின்றனர். இதில் சில புறநகர் பகுதிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடிக்கு சென்ற அரசு பேருந்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அவர்களை உள்ளே அழைத்து வருமாறு ஓட்டுநர் பலமுறை சத்தம் போட்டும், மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார். அரை மணி நேரம் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து, போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது.
தாமதமாக வந்த டிரைவர் பேருந்தை எடுத்து சாலையோரம் நிறுத்தினார். பின் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்தை இயக்குமாறு டிரைவரிடம் கூறினர்.