முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று , மன்மோகன் சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார்.