திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது,
தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 50,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியை மத்திய அரசு பிரித்து வழங்குகிறது. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரியை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மின் உற்பத்தி 43 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு மின்சாரம் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறையால், ஒரு வினாடி கூட மின் தடை இருக்காது. ஒரு வினாடி கூட மின் தடை இல்லா தமிழகத்திற்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்கக்கூடாது என்று முதல் அமைச்சர் கடுமையாக உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.