புதிய முறைப்படி டைப்ரைட்டிங் தேர்வு: ஐகோர்ட் உத்தரவு

புதிய முறைப்படி டைப்ரைட்டிங் தேர்வை நவ. 13க்குள் நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. டைப்ரைட்டிங் இளநிலை தேர்வில், முதல் தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையிலும் நடக்கும்.

ஒரே நாளில் இருவேளைகளில் இத்தேர்வு நடக்கும். முதுநிலை தேர்வும் இரண்டு தாள்களாக நடக்கும். இந்நிலையில், வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டது. இதன்படி, இரண்டாவது தாளை முதலாவதாகவும், முதல் தாளை இரண்டாவதாகவும் மாற்றப்பட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, டைப்ரைட்டிங் ேதர்வை பழைய நடைமுறைப்படி வழக்கம் போலவே நடத்த உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் , ‘‘புதிய முறையில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, புதிய முறைப்படியான தேர்வை நவ. 13க்குள் நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நவ. 16க்கு தள்ளிவைத்தனர்.

Translate »
error: Content is protected !!