இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கை

இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விரைவான தடுப்பூசி முன்னேற்றம் மற்றும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் உறுதியான பாதையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஐ.நாஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!