விநாயகரின் ஐந்து கரங்கள் என்பது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய செயலை குறிக்கும்.
இந்திரன் (Indiran) பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்த காரணத்தால் அவருக்கு ஐந்திரம் (Indiram) என்ற பெயர் உருவானது என்றும் ஐந்திரம் இந்திரனாக மாறினார் என்றும் சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
விநாயகர் யானையின் வடிவமாக காட்சி தருபவர். இந்திரன் யானையை வாகனமாகக் கொண்டு யானை மீது அமர்ந்து காட்சி தருபவர்.
இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.
தாய்லாந்து நாட்டு மக்கள் அரிசி உணவை உண்டு வருகின்றனர். தாய்லாந்து விமான நிலையத்தில் விமான நிலைய பணியாளர்கள் இந்திரன் சிலையை தினமும் வணங்கி பணியைத் தொடங்கி வருகின்றனர்.
எது எப்படி இருப்பினும் ஒற்றுமையால் விநாயகரும், இந்திரனும் ஒன்றே.! அந்நியப் படையெடுப்புகளால் உருவங்கள் மாற்றப்பட்டிருக்கலாம்.