உத்தரகாண்ட மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 224 வீடுகள் சேதமடைந்துள்ளன. ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுபடை மற்றும் மாநில போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணவில்லை. 26 காயமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.