விஜயின் அடுத்த படம் இப்படி தான் இருக்கும்.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து விஜய் தனது 66வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் 66வது படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் ’66’ திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்த கமர்ஷியல் படமாக இது இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவோம் என்றார்.

Translate »
error: Content is protected !!