உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி. வன்முறை குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,
“உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்” என தெரிவித்துள்ளார்.