புதிய யூரியா கொள்கை விவசாயிகளை பாதிக்குமா?

 

மத்திய அரசின் மானிய சுமையை குறைக்கும், புதிய யூரியா கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா என தமிழக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது புதிய யூரியா கொள்கை 2015ஐ குறிப்பிட்டு பேசிய அவர், இக்கொள்கை படி உள்நாட்டு யூரியா உற்பத்தியை பெருக்குவதுடன்,  மானிய சுமையை குறைக்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்படியானால் அந்த  சுமையை விவசாயிகள் மீது சுமத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், ஏற்கனவே விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுவதால், உரங்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

 

Translate »
error: Content is protected !!